Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு மே 03 வரை விளக்கமறியல் 

Posted on May 20, 2025 by Hafees | 382 Views

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான விசாரணையில், மீண்டும் மே 03ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

மூன்று தனித்தனி முறைப்பாடுகளின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ரம்புக்வெல்ல, இன்று (20) சிறைச்சாலை அதிகாரிகள் மூலம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் தனூஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர் மே 03 வரை விளக்கமறியலில் வைக்கப்படுவதாக நீதிமன்ற உத்தரவுபிறப்பிக்கப்பட்டது.