பேருவளை அல் ஹுமைசரா தேசிய பாடசாலையின் புதிய பிரதி அதிபராக S. முஸம்மில் (SLPS) அவர்கள் கடந்த 2025 ஜூலை 16ஆம் திகதி தனது புதிய பொறுப்பை உத்தியோகபூர்வமாக ஏற்றார்.
அவரது கல்விப் பயணம் ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியாலயத்தில் ஆரம்பித்து, கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் உயர்கல்வியை நிறைவு செய்ததுடன், அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியில் தனது ஆசிரியர் பயிற்சியை முடித்துள்ளார்.
பிறகு, தனது முதற்கட்ட ஆசிரியராக தனது சேவையை ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியாலயத்தில் தொடங்கி, அட்டாளைச்சேனை அல் முனீறா மகா வித்தியாலயத்தில் மற்றும் பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் பணியாற்றியுள்ளார். அதன்பின் இலங்கை அதிபர் சேவைகளுக்கான போட்டிப் பரீட்சையில் தேர்ச்சி பெற்று, காத்தான்குடி மீரா பாலிகா மகளிர் தேசிய பாடசாலையில் மற்றும் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் பிரதி அதிபராக பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது.
கிழக்கின் கணிதக் கல்வியில் தனது பங்களிப்பையும், ஆசிரியராக வித்தியாசமான கற்பித்தல் முறையையும் வெளிப்படுத்தியவர் S. முஸம்மில். அவரது நிதானமும், பணிவும், மாணவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் ஆளுமையும், இன்றைய தலைமுறைக்கு பெரும் தொண்டாக அமைகிறது.