அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 2025ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபை, (ஜூலை 25) மாலை, பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்நிகழ்வு, இளைஞர் சேவைகள் அதிகாரி ஏ.ஆர். ரியாஸ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில், பிரதேச செயலாளர் ஏ.சி. அகமட் அப்கர், உதவி பிரதேச செயலாளர் எப். நஹிஜா முசாபிர், மாகாண உதவிப் பணிப்பாளர் சுசந்த, ஓய்வு பெற்ற மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி மஜீத் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
புதிய நிர்வாக சபை விவரம்:
செயற்பாட்டு குழு பொறுப்பாளர்கள்:
ஒழுக்காற்று குழு உறுப்பினர்கள்:
புதிய நிர்வாக சபை அறிவிக்கப்பட்டதும், அதிதிகள் அனைவரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், நியமிக்கப்பட்ட புதிய தலைவர் தனது கண்ணி உரையை ஆற்றினார். நிகழ்வு ஸலவாத்துடன் நிறைவுபெற்றது.