காசாவில் நிலவும் கடும் பசி பட்டினியினால் நிவாரணம் வழங்க சுமார் 950 நிவாரண லாரிகள் இஸ்ரேலின் அனுமதிக்காக காத்திருக்கின்றன. இந்த லாரிகளில் உணவு, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான டொன் நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் வெளியிட்ட தகவலின் பேரில், தேவையான அனுமதி கிடைத்தால் ஆறாயிரம் (6,000) லாரிகள் வரை நிவாரண பொருட்களை காசாவிற்குள் அனுப்ப தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சுமார் 20 லட்சம் மக்கள் கடுமையான பசிக்குள் சிக்கியுள்ள நிலையில், இந்த நிவாரண உதவிகள் அவர்களுக்கு உதவியாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நெருக்கடியை தொடர்ந்து, அரபு நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம், காசாவுக்குள் மனிதாபிமான நிவாரணங்களை அனுமதிக்க இஸ்ரேல் மீது அழுத்தம் செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளன