Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

பல அமைச்சுகளின் ஆலோசனைக் குழுக்களில் உறுப்பினராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை நியமனம்

Posted on May 22, 2025 by Admin | 462 Views

(அபூ உமர்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, நாட்டின் முக்கிய அமைச்சுக்களின் ஆலோசனைக் குழுக்களில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நியமனம், நீர்ப்பாசன, விவசாயம், கால்நடை, காணி, மின்சக்தி, பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சுகளின் ஆலோசனைக் குழுக்களை உள்ளடக்கியது. இதனுடன், அவர் பாராளுமன்ற சபைக் குழுவிலும், தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையிலும் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கிழக்கு மாகாண முன்னாள் வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு,கிராமிய மின்சார அமைச்சராக மூவின மக்களுக்கும் சேவை செய்து மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.

வழங்கப்பட்டுள்ள நியமனங்கள் மூலம், நாடாளுமன்ற நடவடிக்கைகளிலும், அரசியல் தீர்மானங்களிலும் அவரது பங்களிப்பு அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.