முன்னாள் இலங்கை கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வு) நிஷாந்த உலுகெடென்ன குற்றப்புலனாய்வுத் துறை (CID) அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பொத்துஹேரா பகுதியில் இளைஞர் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் வகையில் இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், நிஷாந்த உலுகெடென்ன கடற்படை உளவுத்துறை பணிப்பாளராக இருந்த காலப்பகுதியில் நிகழ்ந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிஷாந்த உலுகெடென்ன 2020 ஜூலை 15ஆம் திகதி இலங்கை கடற்படையின் 24ஆவது தளபதியாக நியமிக்கப்பட்டு, 2022 டிசம்பர் 18ஆம் தேதி தனது சேவையை நிறைவு செய்தார்.
அவரது பதவிக்காலத்தின்போது இடம்பெற்ற பல விசாரணைகளுக்குப் பின்னர் தற்போது அவர் CID-யால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.