Top News
| அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு | | கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் |
Aug 19, 2025

கல்முனை பிரதேச இளைஞர் சம்மேளன புதிய நிர்வாகத்தேர்வு சிறப்பாக நடைபெற்றது

Posted on July 29, 2025 by Admin | 97 Views

(ஹஸீனுல் கமாஸ்)

கல்முனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 2025/2026ஆம் ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவுக் கூட்டம், கல்முனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இளைஞர் சேவை உத்தியோகத்தர் A.L.M. அஸீம் தலைமையிலான இந்த நிகழ்வு, பல்வேறு முக்கிய அதிதிகளின் பங்கேற்புடன் ஆக்கப்பூர்வமான முறையில் முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் W.A. கங்கா சாகரிக்கா, இளைஞர் சேவை உத்தியோகத்தர் R.M. சிறிவர்த்தன, கல்முனை பிரதேச செயலாளர் T.M.M. அன்சார், உதவிப் பணிப்பாளர் A.அமீர், ஜௌபர் (ADP), கல்முனை பொலிஸ் அதிகாரி A.L. வாஹிட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர்.

இதில் கல்முனை பிரதேசத்தில் செயல்படும் அனைத்து இளைஞர் கழகங்களின் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்று, புதிய நிர்வாக குழுவை ஒன்றுபட்ட மனப்பான்மையுடன் தேர்ந்தெடுத்தனர்.

நிகழ்வின் முக்கிய உரைகளில் இளைஞர்களுக்கான தற்போதைய வாய்ப்புகள், எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் மற்றும் சமூக பங்களிப்பு தொடர்பாக தெளிவாக பேசப்பட்டது

புதிய நிர்வாக குழு:

  • தலைவர் – N.M. அப்ரின்
  • உப தலைவர் – I.M. நஸ்ஹான்
  • உப செயலாளர் – A. அல் பர்தான்
  • பொருளாளர் – R.M. சஹித்
  • அமைப்பாளர் – P.M. பயாஸ்
  • உப அமைப்பாளர் – M.H. மல்ஹிபாத்
  • ஊடகப் பொறுப்பாளர் – H.K. ஹஸீனூல் கமாஸ்

மேலும் நிர்வாக குழுவில் ஏனைய உறுப்பினர்களும், இளைஞர்களின் இணைப்பையும் உறுதியையும் பிரதிபலிக்கும் வகையில், ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இக் கூட்டத்தின் மூலம் இளைஞர் சம்மேளனத்தின் எதிர்கால நடவடிக்கைகள் புதிய உற்சாகத்துடன் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.