Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 31, 2026

நாமல் ராஜபக்ஷவுக்கு நேற்று பிடியாணை, இன்று பிணை

Posted on July 29, 2025 by Admin | 460 Views

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக தவறியதன் காரணமாக, ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்தநிலையில், மாலைதீவிலிருந்து இன்று காலை நாடு திரும்பிய நாமல் ராஜபக்ஷ, நகர்த்தல் பத்திரத்துடன் ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

தொடர்ந்து, நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கி விடுவிக்க உத்தரவிட்டது.