27 வயதுடைய ஆதில் மாஜி என்ற இளைஞன் பசியாலும், போசாக்கு இல்லாத நிலையாலும் படிப்படியாக அவரது உயிரை இழந்தார். இது, மனிதநேயம் கேள்விக்குள்ளாகும் வேதனையான ஒரு நிகழ்வாகும்.
காசா நகரிலுள்ள நாசர் மருத்துவமனையில், நாள்தோறும் உணவின்றி வந்த ஆதில், மருத்துவ சிகிச்சை பெற முடியாத நிலையில், உடலில் நோய்கள் பெருகியது. பசி அவரது உடலை நசுக்கியது. நோய்கள் எலும்புகளை உரித்தன. ஆனால் உலகம் அமைதியாய் பார்த்துக்கொண்டது.
“ஆதிலின் மரணம் திடீரென நிகழ்ந்தது அல்ல.
இது பசியால் உருவான ஒரு மௌன படுகொலை,” என மருத்துவமனை ஊழியர் ஒருவர் உணர்வுடன் குறிப்பிட்டார்.
பயங்கரவாதம், பொருளாதாரத் தடைகள் மற்றும் எல்லை அடைப்புகள் காரணமாக காசாவில் வாழும் ஆயிரக்கணக்கானோர் உணவின்றியும், மருந்தின்றியும் வாழ்கின்றனர். ஆதில் மாஜியின் மரணம், அந்த மௌன வதைக்கு சாட்சி மட்டுமல்ல அது நம் அக்கறையற்ற தன்மையை வெளிப்படுத்தும் கண்ணாடியாகவும் அமைகிறது.