Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

மின்னல் தாக்கம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

Posted on May 22, 2025 by Arfeen | 275 Views

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய எச்சரிக்கையின்படி, இன்று நாட்டின் சில பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுடன், ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அங்கு வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ் சூழ்நிலைகளால் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைக்கும் வகையில், பாதுகாப்பான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.