Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை இளைஞர் அமைப்பாளராக இஷ்னாப் அன்வர் நியமனம்

Posted on May 24, 2025 by Admin | 194 Views

(அபூ உமர்)

தேசிய மக்கள் சக்தியின் (NPP) அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் அமைப்பாளராக தோழர் இஷ்னாப் அன்வர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந் நியமனம், தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவர் ஏ. எம். அர்பான் மற்றும் அமைப்பாளர் எஸ். எம். றியாஸ் ஆகியோரின் தலைமையிலான நிர்வாகக் கூட்டத்தில் நேற்று (ஜூன் 23) எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் நடை பெற்றது.

நீண்டகாலமாகக் கட்சியின் களச் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த இஷ்னாப் அன்வர், தனது அர்ப்பணிப்பு மற்றும் பணிச்செயல் திறமையினால் இப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நியமனம் அட்டாளைச்சேனையில் தேசிய மக்கள் சக்தி கட்சி இளைஞர்களின் இயக்கத்திற்கு புதிய ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.