அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பாறுக் நஜீத் அவர்களை கௌரவிக்கும் “பரவசப் பெருவிழா மற்றும் கௌரவிப்பு நிகழ்வு” இன்று (16.08.2025) மாலை 3.30 மணிக்கு பாலமுனை பிரதான வீதியில் நடைபெறுகிறது.
தேசிய காங்கிரஸ் பாலமுனை மத்திய குழுவின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வானது அல்ஹாஜ் எஸ். ரி. வாஹித் (ஜேபி) தலைமையில் இடம்பெறவுள்ளது.
நிகழ்வின் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவரும் முன்னாள் அமைச்சரும் தற்போதைய அக்கறைப்பற்று மாநகர சபை மேயருமான ஏ. எல். அதாஉல்லாஹ் அவர்கள் பங்கேற்கிறார்.
விசேட அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ. எஸ். எம். உவைஸ், அக்கறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம். ஏ. ராஷிக் மற்றும் அக்கறைப்பற்று மாநகர சபை பிரதிமேயர் ஏ. எஸ். எம். உவைஸ் ஆகியோர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதனையொட்டி பொதுமக்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.