( எஸ். சினீஸ் கான்)
தோப்பூர் சேருநுவர பிரதேசத்தில் அமைந்துள்ள தி/மூ/அந்-நூர் வித்தியாலயத்தில், மாணவ, மாணவிகளின் கல்வி முன்னேற்றத்திற்காக இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய பாடசாலைக் கட்டிடம் அமைக்கப்பட உள்ளது.
இந்த கட்டிட நிர்மாணப் பணிகள் Barakah Charity நிறுவனத்தின் நிதி உதவியுடன் ஆரம்பிக்கப்படவுள்ளன. திட்டம் நிறைவேற்றப்பட்டால், பள்ளியின் கல்வி வசதிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு, பல மாணவர்களின் கல்விப் பயணம் மேலும் சிறக்க வழிவகுக்கும்.
இம்முயற்சி Barakah Charity நிறுவனத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் சட்டத்தரணி முஜீப் அமீன் அவர்களின் கடின உழைப்பும், கல்வி மேம்பாட்டிற்கான ஆழ்ந்த பற்றும் காரணமாக சாத்தியமாகியுள்ளது. கல்வி என்பது சமூக முன்னேற்றத்தின் முக்கியத் தூண் எனக்கருதி, பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி வசதிகளை உருவாக்கி வருவது, அவரின் சேவையின் சிறப்பாகும்.
மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் இத்தகைய தொண்டு முயற்சிகள், சமூகத்தில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. சட்டத்தரணி முஜீப் அமீன் போன்ற கல்வி நலனில் அர்ப்பணிப்புடன் செயல்படும் தலைவர்கள், சமூகத்தின் உண்மையான செல்வமாக திகழ்கின்றனர்.
இத்திட்டமானது, கடந்த ஒரு வருடத்திற்குள் அமைக்கப்படுகின்ற பத்தாவது பாடசாலை கட்டிடம் என்பது சிறப்பம்சமாகும்.