Top News
| அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்ப்க்கு கிடைக்குமா? உலகம் முழுவதும் சர்ச்சை! | | மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய House of English இல்ல விளையாட்டுப் போட்டி | | 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு |
Oct 7, 2025

அக்கறைப்பற்று அஸ்ஸிறாஜ் மகா வித்தியாலய மாணவர்களுக்கு சிறப்பு கௌரவம்

Posted on August 24, 2025 by Admin | 129 Views

2025 ஆம் ஆண்டு இணைப்பாட செயற்பாடுகளில் வலய, மாவட்ட மற்றும் மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, அக்கறைப்பற்று அஸ்ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் விமர்சையாக நடைபெற்றது.

பாடசாலையின் Athaullah Art Gallery யில் இடம்பெற்ற இந்நிகழ்வானது அதிபர் எம். எஸ். முகமட் அஸ்லம் தலைமையில் நடந்தேறியது.. இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக SDEC மற்றும் PPA உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

தமிழ் மொழித் தினம், ஆங்கில மொழித் தினம், சிங்கள மொழித் தினம், கணித ஒலிம்பியாட், கணித வினா-விடைப் போட்டி, விஞ்ஞான ஒலிம்பியாட், சமூக விஞ்ஞான போட்டி, விவாதம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திறமைகளை வெளிப்படுத்திய 112 மாணவர்கள் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு அதிகமான மாணவர்கள் உற்சாகத்துடன் இணைப்பாட செயற்பாடுகளில் பங்கேற்று கூடுதல் வெற்றிகளை ஈட்டியமை சிறப்பம்சமாகும்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அதிபர், அவர்களின் பக்கபலமாக இருந்த பெற்றோர்கள், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், வலயத் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பையும் பாராட்டினார்.