Top News
| நாடளாவிய மின்தடைக்கான உண்மைக் காரணத்தினை வெளியிட்ட பிரதி அமைச்சர் | | 37 வருடகால கல்விச் சேவையிலிருந்து விடைபெறும் கிண்ணியா கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஜே.எம். ரியாஸ் | | ஊழல்வாதிகளுக்குத் தண்டனை கோரி கொழும்பு கோட்டையில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி! |
Oct 18, 2026

அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்ட நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டம்

Posted on August 25, 2025 by Admin | 265 Views

(அபூ உமர்)

நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி ஆர். ராகுலநாயகி அவர்களின் ஏற்பாட்டில் அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா தலைமையில் இன்று (25.08.2025) நாவிதன்வெளி பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களான எம். எஸ். உதுமாலெப்பை (ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர்), எம். எஸ். அப்துல் வாசித், நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இ. ரூபசாந்தன், பிரதேச சபை கௌரவ உறுப்பினர்கள், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி திலகராணி கிருபைராஜா, திணைக்களத் தலைவர்கள் மற்றும் பல உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.