Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

அட்டாளைச்சேனையின் அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Posted on August 27, 2025 by Admin | 277 Views

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர் அவர்களின் ஏற்பாட்டில் அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (27.08.2025) அட்டாளைச்சேனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ். அப்துல் வாசித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், அட்டாளைச்சேனை பிரதேச சபை கௌரவ தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ்,பிரதித் தவிசாளர் பாறூக் நஜீத்,பிரதேச சபை கௌரவ உறுப்பினர்கள், உதவி பிரதேச செயலாளர் எப். நஹீஜா முஸாபிர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ. மஜீட், பிரதேச செயலக கணக்காளர் எம்.எப். பர்ஹான் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.