Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

அக்கறைப்பற்று மேயர் அதாஉல்லா மற்றும் உலமாக்களுக்கிடையில் நடைபெற்ற விசேட சந்திப்பு

Posted on August 30, 2025 by Admin | 298 Views

(சனீஜ்)

அக்கறைப்பற்று மாநகரசபை முதல்வர் ஏ. எல். எம். அதாஉல்லா அவர்களுக்கும் அக்கறைப்பற்று பிரதேச உலமாக்களுமிடையிலான சிறப்புச் சந்திப்பு முதல்வர் அவர்களின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

சமூக நலனையும், மக்களின் அக்கறைகளையும் முன்னிலைப்படுத்தி பல முக்கிய விடயங்கள் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன. அவற்றில்,

  • போதைப்பொருட்களை தடுக்கும் நடவடிக்கைகள், இஸ்லாமிய ஒழுக்கம் மற்றும் மாணவர்களின் ஒழுக்க வளர்ச்சி,
  • வெள்ளநீர் வடிகால் மற்றும் நிலத் தொற்றுகளுக்கான நீடித்த தீர்வுகள்,
  • பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக மாநகரசபை வழங்கக்கூடிய ஆதரவு,
  • கருங்கொட்டித் தீவின் மரபுக் கௌரவத்தை பாதுகாப்பது மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள்,
  • வரவிருக்கும் மீலாது நபி விழாவை ஒருங்கிணைப்பதற்கான கூட்டுப்பணிகள் எனப் பல விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

மேலும், மத சகவாழ்வு, சமூக ஒற்றுமை மற்றும் இனநேசம் ஆகியவற்றை வலுப்படுத்தும் முக்கிய தீர்மானங்களும் இச்சந்திப்பில் எடுக்கப்பட்டன