Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

பாதுகாப்பு கோரிய எம்.பி.க்கள் குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் பரிசீலனை செய்யும் – பதில் ஐஜிபி பிரியந்த வீரசூரிய அறிவிப்பு

Posted on May 27, 2025 by Admin | 365 Views

பாதுகாப்பு கோரிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவுகள் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக பதில் காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) மற்றும் வழக்கறிஞர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தொடர்புத் துறையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, ஆபத்து மதிப்பீடுகள் (Risk Assessments) முடிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விடயத்தில் எந்தவொரு தாமதமும் இல்லை என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.

இந்த தகவல், 2025 மே 23 ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில், சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில், பதில் காவல் துறைத் தலைவர், அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவின் இயக்குநர் மற்றும் தொடர்புடைய உயர் அதிகாரிகள் பங்கேற்ற சந்திப்பின் போது பகிரப்பட்டது.