(அக்கறைப்பற்று செய்தியாளர்)
மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில், அக்கறைப்பற்று கல்வி வலயம் 128 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
இந்த சிறப்பான சாதனையை நிகழ்த்திய வீர, வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
மேலும், இந்த வெற்றிக்கு பின்னால் உந்துசக்தியாக இருந்த வலயக் கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மட்டத்திலும் சாதனை படைக்க வாழ்த்துகள்.