மனிதகுலத்திற்கு அன்பும் கருணையும் வழிகாட்டிய நபி முஹம்மது (ஸல்) அவர்களின் பிறந்த தினம் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் கல்வி அமைச்சின் 28/2025ம் இலக்க சுற்று நிருபத்திற்கமைய இன்று (10.09.2025) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
அதிபர் எம்.ஐ. அஜ்மீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கறைப்பற்று ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலவி அபுல்காசிம் அவர்கள், நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வு, தியாகம், மற்றும் மனித நேயப் பண்புகளை சிறப்பாக எடுத்துரைத்தார். அவரது உரையானது மாணவர்களிடையே உணர்வுபூர்வமானதாக அமைந்திருந்தது.
நிகழ்வை நினைவாகக் கொண்டாடும் வகையில் மாணவர்களுக்கு பகற்போசணமும் வழங்கப்பட்டது.
மாணவர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வானது கல்வியுடன் சேர்ந்து ஒற்றுமை, அன்பு, மற்றும் மதிப்பின் செய்தியையும் பரப்பியதோடு அனைவரது மனங்களிலும் மறக்கமுடியாத நினைவாகப் பதிந்தது.