Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

கொத்மலை விபத்துக்கான காரணம்-ஆய்வின் முடிவுகள் வெளியீடு

Posted on May 29, 2025 by Admin | 458 Views

கொத்மலை-கெரண்டிஎல்ல பகுதியில் கடந்த மே 11ஆம் திகதி ஏற்பட்ட பேருந்து விபத்து தொடர்பான விசாரணை குழுவின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கதிர்காமம் முதல் கண்டி ஊடாக குருநாகல் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து, 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து ஏற்பட்ட இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர், மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

விபத்திற்கான காரணத்தினை பரிசீலித்த குழு தயாரித்த அறிக்கையின் 24, 25 ஆம் பக்கங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள காரணங்களாவன:

  • பேருந்து சாரதி, வெலிமடையில் 15 நிமிடங்கள் மட்டுமே ஓய்வு எடுத்திருந்தார்.
  • மோட்டார் வாகன சட்டம் படி, ஒவ்வொரு 4.5 மணி நேரம் இயக்கிய பிறகு, 30 நிமிட ஓய்வு கட்டாயமாக இருக்க வேண்டும்.
  • சாரதி, 6.5 மணி நேரம் தொடர்ந்து வாகனம் ஓட்டியதால், சட்டம் மீறப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்:

  • விபத்துக்கான மேலும் ஒரு முக்கிய காரணமாக வீதியின் இருபுறமும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணிகளில் கட்டப்பட்ட கடைகள் குறிக்கப்பட்டுள்ளன.
  • அந்த இடங்களில் முன்னர் மண் மேடுகள் மற்றும் மரங்கள் இருந்தமை, பழைய புகைப்படங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவை இருந்திருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்கமுடியுமென்றும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
  • இத்தகைய அபிவிருத்திகள் முன்னோட்டமும் அனுமதியும் இல்லாமல் நடந்துள்ளன, எனவே அதற்கான பொறுப்பும் ஆராயப்பட வேண்டும் என குழு பரிந்துரை செய்துள்ளது.