Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

அடுத்த வருடம் முதல் உரிய காலத்தில் பரீட்சைகள் நடைபெறும்

Posted on September 13, 2025 by Admin | 115 Views

அடுத்த வருடம் முதல் சாதாரண தர (சா/த) மற்றும் உயர்தர (உ/த) பொதுப் பரீட்சைகள் தங்களுக்குரிய காலப்பகுதியில் நடத்தப்படுவதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு எடுத்துள்ளது.

அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உ/த) பரீட்சை ஆகஸ்ட் மாதத்திலும், 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சா/த) பரீட்சை டிசம்பர் மாதத்திலும் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சா/த) பரீட்சை 2026 பெப்ரவரி மாதத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, பாடசாலை விடுமுறைகள் பரீட்சை கால அட்டவணைக்கு ஏற்ப வழங்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ பாடசாலை கல்வித் தவணை நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.