Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

அக்கரைப்பற்று மாநகரசபையின் புதிய மேயராக ஏ.எல்.எம்.அதாஉல்லா நாளை பதவியேற்பு

Posted on May 29, 2025 by Admin | 242 Views

அக்கரைப்பற்று மாநகரசபையின் புதிய மேயராக ஏ. எல். எம். அதாஉல்லா அவர்கள் பதவியேற்கும் விழா, 2025 மே 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு, அக்கரைப்பற்று நீர்ப்பூங்காவில் நடைபெறவுள்ளது.

இவ் விழாவில் பாரம்பரிய கலை மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் உள்ளூராட்சி தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் இடம்பெறும் ஏற்பாடாகியுள்ளது.

மேயர் பதவியேற்பு விழாவிற்கு பல்வேறு அரசியல் பிரமுகர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கவுள்ளனர்.