Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவர்களுக்கு சுற்றியுள்ள சமுதாயத்தை புரிந்து கொள்ளும்  விழிப்புணர்வு நிகழ்வு

Posted on May 30, 2025 by Admin | 437 Views

(ஹபீஸ்)

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரின் வழிகாட்டலின் கீழ், அறபா வித்தியாலய மாணவர்களுக்கான சிறப்பான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (மே 29) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் செயற்பாடுகள், இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் அரச ஓய்வூதியத் திட்டம், உளவளத்துணையின் முக்கியத்துவம், மற்றும் சமூக சீர்திருத்தத்தின் அவசியம் போன்ற முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்வில், பிரதேச செயலகத்துடன் தொடர்புடைய பல துறைகளின் உத்தியோகத்தர்கள் பங்கேற்று, மாணவர்களுக்கு விளக்கங்களும், அறிவுரைகளும் வழங்கினர். நிகழ்வானது மாணவர்களிடையே சமூகப் பொறுப்பை ஊக்குவிக்கவும், நவீன சூழ்நிலைகளில் உள்ள அபாயங்களை புரிந்து கொள்வதற்கும் வழிவகுத்தது.