கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பில், 2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் 2025 செப்டம்பர் 18 முதல் ஒக்டோபர் 9 வரை இணையவழியாக ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களைப் பாடசாலை அதிபர்கள் மூலமாகவும், தனியார் விண்ணப்பதாரர்கள் இணையவழியாகவும் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், தனியார் விண்ணப்பதாரர்கள் க.பொ.த. (சா.த.) பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்துதல் கட்டாயம். எனினும், அடையாள அட்டை இல்லாதவர்கள் தங்கள் பாதுகாவலரின் (தாய் அல்லது தந்தை) தேசிய அடையாள அட்டை மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
விண்ணப்பங்கள், இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic வழியாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் தளங்களில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை சரியாக பின்பற்றி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.