Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நடைபெற்ற அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Posted on September 20, 2025 by Admin | 369 Views

(அபூ உமர்)

அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம அவர்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (20.09.2025) அம்பாறை மாவட்ட செயலக ஏ.ஐ. விக்கிரம கேட்போர் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இக் கூட்டம் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ அவர்களின் தலைமையில் பாராளுமன்றச் சபை முதல்வரும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சருமான கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களின் பங்குபற்றலுடன் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம். எஸ். உதுமாலெப்பை, எம். எஸ். அப்துல் வாசித், அஷ்ரஃப் தாஹிர், அபூபக்கர் ஆதம்பாவா, கே. கோடிஸ்வரன், மஞ்சுல சுகத் ரத்நாயக, ஏ. எம். எம். எம். ரத்வத்தே, மற்றும் சட்டத்தரணி பிரியந்த விஜேரத்ன, உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.