Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

மின்சார சபை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் ரத்து 

Posted on September 23, 2025 by Admin | 41 Views

மின்சார விநியோகத்தைத் தடையின்றி பேணும் நோக்கில் மின்சார சபை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மறு அறிவித்தல் வெளியாகும் வரை இந்தத் தீர்மானம் அமுலில் இருக்கும் என மின்சார சபையின் பொது முகாமையாளர் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 21 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

பொதுமக்களின் சாதாரண வாழ்வில் இடையூறு ஏற்படாத வகையில் 1979 ஆம் ஆண்டு 61ம் இலக்க அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கையொப்பமிட்டு இந்த அறிவித்தலை வெளியிட்டார்.