(ஏ.எஸ்.எம்.அர்ஹம்)
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் நீர் வசதி இன்றி வாழ்ந்து வந்த பல குடும்பங்களின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் நோக்கில் கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் பொதுக்கிணறுகளை அமைத்து வழங்கியுள்ளது.
YWMA பேரவையின் ஒருங்கிணைப்பில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான கெளரவ ரஹ்மத் மன்சூர் அவர்களின் முன்னெடுப்பில் இந்த முயற்சி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
மிகக் குறுகிய காலத்திலேயே கிணறுகள் திறந்து வைத்து பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டமை, அப்பிரதேச மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மக்கள் நீண்டகால தண்ணீர் சிரமத்திலிருந்து விடுபட்டதற்கு நன்றியும் மகிழ்ச்சியும் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல். அஸ்வர் சாலி, பயனாளிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பவுண்டேசன் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று, ரஹ்மத் பவுண்டேசனின் இந்த மனிதநேய பணியை பாராட்டினர்.