Top News
| தாஹிர் எம்பியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரிக்கு பெறுமதியான தளபாடங்கள் கையளிப்பு | | கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய ‘மாப்பிள்ளை ஊர்வலத்தை’ அரங்கேற்றி அசத்தியது அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரி | | யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அக்கரைப்பற்றில் முன்னெடுப்பு |
Oct 15, 2026

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

Posted on September 30, 2025 by Admin | 303 Views

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்தின் அடிப்படையில் இன்று (30) நள்ளிரவு முதல் சில எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் அமலுக்கு வரும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளதாவது,

இதன்படி, லங்கா வெள்ளை டீசல் ஒரு லிட்டரின் விலை ரூ.6 குறைக்கப்பட்டு, புதிய விலை ரூ.277 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒக்டேன் 95 பெற்றோல் லிட்டருக்கு ரூ.6 குறைக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை ரூ.335 ஆகும்.

மேலும், மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.180 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒக்டேன் 92 பெற்றோல் மற்றும் லங்கா சூப்பர் டீசல் விலைகளில் மாற்றமில்லை என்று பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.