அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் கை ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வியாபாரம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய செயல்பாடுகள் மதஸ்தலங்களில் நடைபெறும் வணக்க வழிபாடுகளுக்கும் பொதுப் போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்ததோடு, அதிக ஒலி காரணமாக மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சம்மாந்துறை பிரதேச சபையும் சம்மாந்துறை பொலிஸாரும் இணைந்து ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கடந்த 2025 செப்டம்பர் 4 முதல் 23 வரை 11 கை ஒலிபெருக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பிரதேச சபை தகவல் மையம் வெளியிட்ட அறிவிப்பில், இந்நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமெனவும் அனைத்து வியாபாரிகளும் சபையின் விதிமுறைகளை மதித்து பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.