கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் காலம் வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதியுடன் நிறைவடையும் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அன்றைய தினம் நள்ளிரவு 12.00 மணிக்குப் பிறகு இணையவழி விண்ணப்ப முறை மூடப்படும் எனவும், எந்தவொரு காரணத்திற்கும் இறுதி நாளை நீடிக்கமாட்டோம் எனவும் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. ஆகையால், மாணவர்கள் அனைவரும் கடைசி நேரம் வரை காத்திருக்காமல், முன்கூட்டியே விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சாதாரண தரப் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து கூடுதல் தகவல்களுக்கு பின்வரும் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்: 0112-784208 / 0112-784537 / 0112-785922.
அத்துடன், 0112-784422 என்ற தொலைநகல் எண் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் வினவல்கள் செய்யலாம் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.