Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

நைஜீரியாவில் கடும் வெள்ளம் – 115 பேர் உயிரிழப்பு

Posted on May 31, 2025 by Admin | 376 Views

நைஜீரியாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக, இதுவரை குறைந்தது 115 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அந்த நாட்டு மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். மீட்பு பணிகளில் உள்ளூர் மற்றும் தேசிய படைகள் ஈடுபட்டுள்ளன.

பருவமழை காரணமாக நிலவும் சீரற்ற காலநிலை, மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வீடுகள் மற்றும் குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பெரிதும் சேதமடைந்துள்ளன.