நாட்டில் முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அளவு முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, இனி வெள்ளை முட்டை ஒன்று ரூ.18க்கும், சிவப்பு முட்டை ஒன்று ரூ.20க்கும் விற்பனை செய்யப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டை விலைகள் அண்மைக்காலமாக உயர்ந்திருந்த நிலையில், இந்த விலை குறைப்பு நுகர்வோருக்கு நிம்மதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.