Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

யாழ். பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு இன்றுடன் 44 ஆண்டுகள் நிறைவு

Posted on June 1, 2025 by Hafees | 240 Views

இன்று (2025 மே 31) யாழ்ப்பாணம் பொது நூலகம் தீயூட்டப்பட்டு 44 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

1981 ஆம் ஆண்டு மே 31ஆம் திகதி, நள்ளிரவில் வன்முறைக் குழுவொன்றினால் தீயூட்டப்பட்ட இந்த நூலகம், அந்த காலத்தில் 97,000 க்கும் மேற்பட்ட அரிய நூல்களை கொண்டிருந்தது. தென்கிழக்காசியாவின் முக்கியமான நூலகங்களில் ஒன்றாக விளங்கிய இதன் அழிவால் பல பாரம்பரிய, ஓலைச்சுவடி மற்றும் பத்திரிகைப் பிரதிகள் நிரந்தரமாக அழிந்தன.

1933 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நூலகம், ஆரம்பத்தில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் தொடங்கப்பட்டு, மக்களின் ஆதரவுடன் விரைவில் விரிந்தது.
1981 ஆம் ஆண்டு ஏற்பட்ட அழிவுக்கு பின்னர், 2004 ஆம் ஆண்டு நூலகம் புனரமைக்கப்பட்டு, மீண்டும் திறக்கப்பட்டது.

தற்போது, நூலகத்தில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 145,000 நூல்கள் உள்ளதாகவும், கிளை நூலகங்களை உட்பட மொத்தமாக 220,000 நூல்கள் உள்ளதாகவும் நூலகர் தெரிவித்துள்ளார்.