Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

ஆலங்குளம் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உதுமாலெப்பை எம்பி நடவடிக்கை

Posted on October 17, 2025 by Admin | 308 Views

(ஆலங்குளம் செய்தியாளர்)

“கிராமம் தோறும் மக்களோடு மக்களாக” என்ற தொனிப்பொருளில் மக்களிடையே சென்று அவர்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீர்வுகளை வழங்கும் முயற்சியின் முதற்கட்டமாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை ஆலங்குளம் பிரதேச மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளை அறிவதற்கான மக்கள் சந்திப்பு நிகழ்வு ஆலங்குளம் ஆயுர்வேத வைத்தியசாலை கூட்ட மண்டபத்தில் நேற்று (17.10.2025) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், உதவிப் பிரதேச செயலாளர் திருமதி நஹீஜா முஸக்கிர், கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். றஸ்மி, ஆலங்குளம் மத்திய மருந்தக பொறுப்பதிகாரி வைத்தியர் எஸ்.எம். முனாஸ், ஆயுர்வேத வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் ஏ.எல். ஹம்ஸாத், பிரதேச சபை உறுப்பினர்கள் ஏ.சி. நியாஸ், எஸ்.ஐ. றியாஸ், றகுமானியா வித்தியாலய அதிபர் கே.எல். முனாஸ், கல்வி அலுவலக தொழினுட்ப அதிகாரி எம்.ஐ. ஜவாத், றகுமானியா வித்தியாலய அபிவிருத்திக் குழு செயலாளர் ஏ.ஏ. பமீல், எம்.பி.யின் இணைப்பாளர் எம்.ஏ. அன்சார் (Rtd.pr) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் சந்திப்பின் போது, ஆலங்குளம் றகுமானியா வித்தியாலயத்தின் வசதியின்மை, ஆசிரியர் பற்றாக்குறை, சேதமடைந்த பாடசாலைக் கட்டிடங்கள், விளையாட்டு மைதான அபிவிருத்தி, மற்றும் ஆலங்குளம் ஆயுர்வேத வைத்தியசாலை தற்காலிக கட்டிடத்திலிருந்து புதிய சுகாதாரத் திணைக்கள கட்டிடத்திற்கு மாற்றுதல் ஆகிய முக்கிய பிரச்சினைகள் குறித்து மக்கள் முன்வைத்தனர்.

மேலும், ஆலங்குளம் பிரதேச வீதிகள் மற்றும் வடிகான்கள் மேம்படுத்தல், ஆலங்குள பல்தேவை கட்டிடப் பணிகள் நிறைவு செய்தல், மற்றும் அக்கரைப்பற்று–சம்புநகர் வழியாக ஆலங்குளம் வரையிலான இடைநிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் ஆரம்பித்தல் போன்ற கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.

மக்கள் முன்வைத்த இப்பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வுகள் காணும் நோக்கில், பாராளுமன்ற உறுப்பினர்கள், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் மற்றும் ஏனைய திணைக்கள தலைவர்களும் இணைந்து நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

சந்திப்பின் பின்னர் எம்.பி. உதுமாலெப்பையும் அதிகாரிகளும் ஆலங்குளம் றகுமானியா வித்தியாலயம், ஆயுர்வேத வைத்தியசாலை, மத்திய மருந்தகம், பல்தேவை கட்டிடம் மற்றும் ஆடைத்தொழிற்சாலை கட்டிடம் ஆகிய இடங்களுக்கு நேரடி விஜயம் மேற்கொண்டு நிலவரங்களை ஆய்வு செய்தனர்.