பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை (22) இளஞ்சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு கலந்த ஆடைகளை அணிந்து சபை நடவடிக்கைகளில் பங்கேற்க தீர்மானித்துள்ளனர்.
மார்பகப் புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிக்கு சபாநாயகர் இன்று அனுமதி வழங்கியுள்ளார்.
இதையடுத்து, நாளைய சபை அமர்வில் பங்கேற்கும் போது அதற்கான அறிவிப்பின் படி செயல்படுமாறு அனைத்து உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் அறிவுறுத்தினார்.
மேலும், உலகளாவிய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வை முன்னிறுத்தும் அடையாள சின்னத்தை பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் தயாரித்துள்ளதாகவும், அந்த சின்னம் நாளை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.