(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 2025.10.21 ஆம் திகதி வீசிய பலத்த காற்று மற்றும் பெய்த கடும் மழையினால் அட்டாளைச்சேனை 06 ஆம் பிரிவில் கடற்கரையோரமாக அமைந்துள்ள மையாவாடி சுற்றுமதிலின் ஒரு பகுதி இடிந்து முழுமையாக சேதமடைந்துள்ளது.
இவ்வனர்த்தத்தில் உயிர்ச்சேதங்கள் ஏதும் ஏற்படாதிருந்தாலும் சுற்றுமதிலின் இடிபாடுகள் சமூகத்தின் மனங்களில் பெரும் கவலையையும் துயரத்தையும் தோற்றுவித்துள்ளன.
இது குறித்து, பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை அவர்களின் வேண்டுகோளின் பேரில் தவிசாளர் ஏ. எஸ். எம். உவைஸ் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சேதநிலையை நேரில் பார்வையிட்டார்.
இச் சம்பவம் ஒரு மதிலின் இடிபாடு மட்டுமல்ல நம் சமூக ஒற்றுமையும், ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கும் தருணம் ஆகும்.
தற்போது நம் சமூகத்தின் ஒவ்வொருவருக்கும், தனவந்தர்களுக்கும், இளைஞர்களுக்கும், சமூக நலனில் அக்கறை கொண்ட அனைவருக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது. மையாவாடி சுற்றுமதிலை மீண்டும் உறுதியாக எழுப்புவது நம் அனைவரின் கூட்டுக் கடமையாகும்.
இது வெறும் ஒரு மதிலின் மீள்நிர்மாணம் அல்ல நம் சமூகத்தின் ஒற்றுமையையும், பரஸ்பர அக்கறையையும் வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாகும். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு இச்சுற்று மதில் உடனடியாக மீள்நிர்மாணம் செய்ய நாம் அனைவரும் முன்வரவேண்டும் என்பது பொதுமக்களின் நம்பிக்கையாகும்.
ஊரிலுள்ள தனவந்தர்களே! மறுமைக்காக முதலீடு செய்ய விரும்பும் நற்குணமுடையவர்களே! இம்மதிலை நிர்மாணிக்க முன்வாருங்கள்.
