Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

வெலிகம பிரதேச சபைத் தலைவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

Posted on October 22, 2025 by Admin | 380 Views

வெலிகம பிரதேச சபைத் தலைவர் ‘மிதிகம லசா’ எனும் லசந்த விக்ரமசேகர இன்று (22) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

அவர் பிரதேச சபையில் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள் சபைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

கடுமையாக காயமடைந்த விக்ரமசேகரவை உடனடியாக பிரதேச சபை அதிகாரிகள் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துப்பாக்கிதாரிகள், ஒரு ஆவணத்தில் கையொப்பம் பெறுவது போல நடித்துக்கொண்டு சபைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர் என தெரியவந்துள்ளது.