Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

இலங்கையில் மீண்டும் PCR பரிசோதனை

Posted on June 2, 2025 by Admin | 285 Views

இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவதையொட்டி, இலங்கை துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் தொற்றாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கை பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சிலாபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

“தற்போது வைத்தியசாலைகளில் காய்ச்சலுடன் அனுமதிக்கப்படுபவர்களுக்கு மட்டும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குள் வரும் பயணிகள் மூலமாக வைரஸ் பரவல் ஏற்படும் அபாயம் உள்ளதால், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் கட்டாயமாக PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.”

உரிய கட்டுப்பாடுகள் இல்லாமல் இருந்தால், நாட்டில் மீண்டும் கொரோனா பரவலின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.