Top News
| பிரதேச சபைத் தவிசாளர் தெரிவு நாளில் காணாமல் போன NPP உறுப்பினர்கள் இருவரும் மீட்கப்பட்டுள்ளனர் | | பேருந்தில் சென்ற பெண்ணின் கால்களை மொபைலில் படம் பிடித்த இளைஞனுக்கு 2 வருட கடூழிய சிறை தண்டனை | | பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் சாரதிக்கு ஏற்பட்ட மாரடைப்பால் பேருந்து விபத்து |
Jun 27, 2025

இலங்கையில் Starlink சேவை அறிமுகத்திற்கு அனைத்தும் தயாராகும் நிலையில்!

Posted on June 2, 2025 by Hafees | 94 Views

இணையச் சேவை வழங்குநரான Starlink அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து விடயங்களும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Starlink இலிருந்து பெறப்படவுள்ள தகவல் கட்டுப்பாட்டு பலகை (Dashboard) கிடைத்தவுடன், எவ்வித தாமதமும் இன்றி சேவைகளை ஆரம்பிக்க முடியும் என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, அனைத்து முன்நிபந்தனைகளையும் அரசாங்கம் நிறைவு செய்துள்ளதாகப் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொடர்பு மற்றும் தகவல் கொள்கைக்கான ஒருங்கிணைப்பாளராக பணியாற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தூதுவர் ஸ்டீவ் லாங்குடன் சிங்கப்பூரில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.