Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது!

Posted on May 30, 2025 by Hafees | 324 Views

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்த 48 மணி நேர அடையாளப் பணிப்புறக்கணிப்புஇன்றும் (மே 30) தொடர்கிறது.

மே 28 ஆம் திகதி நள்ளிரவு முதல் தொடங்கிய இந்தப் பணிப்புறக்கணிப்பு, ஆட்சேர்ப்பு செயன்முறையில் ஏற்பட்ட தாமதம் உள்ளிட்ட 10 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படுகிறது.

இதன் காரணமாக அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பொதுமக்கள் பலர் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.