Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

க்ளென் மேக்ஸ்வெல் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பு

Posted on June 2, 2025 by Hafees | 454 Views

அவுஸ்திரேலியாவின் சகலதுறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல்50 ஓவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், இருபதுக்கு இருபது (T20) போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேக்ஸ்வெல் தனது ஆட்டத்திறமையாலும், பந்துவீச்சு மற்றும் அதிரடி ஆட்டங்களாலும் T20 போட்டிகளில் முக்கிய வீரராக உள்ளார். அவர் இந்த தீர்மானத்தை, தனது சீரான செயல்திறனையும் எதிர்காலத் திட்டங்களையும் கருத்தில் கொண்டு எடுத்துள்ளதாக கருதப்படுகிறது.