Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
May 31, 2026

அட்டாளைச்சேனையைப் பெருமைப்படுத்தும் இளம் பேராசிரியர்

Posted on June 6, 2025 by Admin | 590 Views

(என்.எம்.நஜாத்)

தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் , முகாமைத்துவ மற்றும் தகவல் தொழில்நுட்ப திணைக்களத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றி வருகின்ற அட்டாளைச்சேனைச் சேர்ந்த அபூபக்கர் இல்முடீன், 2022 செப்டம்பர் 16 ஆம் திகதி முதல் செயற்படும் வகையில் பேராசிரியராக Professor in Management and Information Technology தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.

இவர் தனது கலாநிதிப் பட்டத்தை Ph.D in Management, Majored in Management Science and Engineering சீனாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான Huazhong University of Science and Technologyஇல் முடித்துள்ளதுடன் M.Sc in Information Systems தினை SLIIT லும் மற்றும் BBA (Hons) Spl in Information Systems தினை SEUSL ஆகிய பட்டங்களை தனது கல்வித் தகைமைகளாக கொண்டுள்ளார்.

இவரின் ஆய்வுக் கட்டுரைகளும் புத்தக அத்தியாயங்களும் உயர்தர ஆய்வு சஞ்சிகைகளிலும் புத்தகங்களிலும் பிரபல்ய வெளியீட்டாளர்களான Elsevier, Springer, Emerald, Taylor & Francis, Sage, & IGI Global ஆகியோரால் பிரசுரிக்ககப்பட்டுள்ளது. மேலும் இவர் Information Technology, Java Programming, E-commerce ஆகிய துறைகளில் மாணவர்களுக்கான புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, ஆதம்பாவா அபூபக்கர் மற்றும் மர்ஹூம் அவ்வா உம்மா தம்பதியினரின் புதல்வராகிய இவர், இளம்வயதிலேயே பேராசிரியராக தரம் உயர்த்தப்பட்டமையானது அட்டாளைச்சேனை மக்களுக்கு பெருமையாகும். இவரது இந்த கல்விச் சாதனை இளம் தலைமுறையினருக்கு பெரும் ஊக்கமளிக்கக்கூடியது.


“உங்களின் கல்விச் சாதனைக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள்!”