Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

இலங்கையின் கல்வித் துறையில் நவீன மாற்றங்கள்

Posted on June 6, 2025 by Admin | 472 Views

இலங்கையின் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வித் துறையில் நவீன மாற்றங்களை முன்னெடுக்க கல்வி அமைச்சுசார் ஆலோசனைக்குழுவினால் ஆறு உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்த தீர்மானம், பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரான (கலாநிதி) ஹரினி அமரசூரிய தலைமையில் கடந்த ஜூன் 3ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சு ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

உப குழுக்களின் முக்கிய நோக்கங்கள்:

  • கல்வி மறுசீரமைப்பு
  • பாடசாலைகளில் மனிதவள மற்றும் பௌதீக வள பற்றாக்குறை
  • இடைநிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கை
  • கல்விச் சபை நிறுவல்
  • உயர் கல்வி பிரிவுகள் மேம்பாடு
  • திறன் மற்றும் தொழிற் கல்வி வளர்ச்சி

பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கல்வித் துறையில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் சிக்கல்களை முன்வைத்து, அவற்றுக்கு விரைவான தீர்வு தேவை என்பதை வலியுறுத்தினர்.

பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறை, பல்கலைக்கழகங்களில் இயலாமை கொண்ட மாணவர்களுக்கு தேவையான வசதிகள் ஆகியவற்றுக்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், கொள்கை ரீதியான மாற்றங்களுக்காக அரசாங்கம் தலையிடும் என்றும் பிரதமர் கூறினார்.

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.