Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் பெருநாள் வாழ்த்து

Posted on June 6, 2025 by Admin | 312 Views

தியாகங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட புனித நாள்..

இஸ்லாம் ஒரு சாந்தி மார்க்கம். அது தியாகங்களாலும் அர்ப்பணிப்புகளாலும் கட்டியெழுப்பப்பட்டது. நமது பாரம்பரியம் உலகம் தோன்றியபோதே ஆரம்பிக்கப்பட்டு விட்டது.
முகம்மது நபி( ஸல்) அவர்களுடைய உம்மத்தாக நாம் இருக்கும்போது இப்ராஹீம் நபியின் வாழ்வியல் பற்றியும் அதில் நிறைந்துள்ள தியாகம் பற்றியும் சிலாகித்து நடைமுறைப்படுத்துகிறோம் என்பது நமது ஓர் இறைக் கொள்கையை இன்னும் பலப்படுத்திக் காட்டுகிறது.

புனித மக்கா நகரம் கஃபாவில் நாம் நிகழ்த்தும் ஹஜ் அனுஷ்டானமும் நமது கடமை நிறைவேற்றுதலை தெளிவுபடுத்துகிறது என்றாலும் மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் தூய சுவர்க்கத்தை அடைந்து கொள்வதற்காக தியாகம் செய்யாமல் அது சாத்தியமில்லை என்பதை இப்ராஹீம் நபி அவர்களுடைய தியாக வாழ்வு ஞாபகப்படுத்துகிறது. அந்த வகையில் முஸ்லிம்களாகிய நமது இரண்டாவது ஈகைத் திருநாளாகிய இத்தினத்தில் எல்லோரும் தியாகத்தோடு செயல்படுதல் வேண்டும் என்பதை பறைசாற்றி இந்த பெருநாள் தினமானது உங்களது வாழ்வில் ஒளி மிகுந்ததாக அமைய வேண்டும் என்று பிராத்தித்து மிகப்பெரிய தியாகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற நமது பலஸ்தீன உறவுகளுக்காக எண்ணங்களால் வருந்தி கண்கள் கசிந்து பிரார்த்தித்தபடி இனிய ஈகை திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எம்.எஸ்.உதுமாலெப்பை( பா.உ)
திகாமடுல்ல மாவட்டம்,
பிரதி தேசிய அமைப்பாளர்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.