Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

கெஹெலிய ரம்புக்வெல்லா வீட்டுப் பணியாளர் இலஞ்ச ஊழல் வழக்கில் கைது

Posted on June 11, 2025 by Arfeen | 257 Views

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இல்லத்தில் பணியாற்றிய பெண் ஒருவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது.சுகாதார அமைச்சில் பெயரளவிலான நியமனங்கள் மூலம் அரசாங்க சம்பளம் மற்றும் மேலதிக நேர ஊதியங்களை முறையற்ற வகையில் பெற்றுக்கொண்டதாக நடைபெற்ற விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த பின்னணியிலேயே, குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அமைச்சரின் அதிகாரங்களைத் தவறாக பயன்படுத்தி இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.