Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

நுவரெலியாவில் கனமழையால் நீர்த்தேக்கங்கள் திறப்பு

Posted on June 11, 2025 by Hafees | 217 Views

நேற்று இரவு முதல் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஆறுகள் நீரோடைகள் ஆகிய பெருக்கெடுத்துள்ளன.

நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதனால் மேல் கொத்மலை நீர்த்தேகத்தின் ஒரு வான்கதவு, இன்று (11) அதிகாலை திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்துள்ள இதேவேளை நோர்ட்டன்பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள விமல சுரேந்திர நீர்த்தேக்கப்பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதானால் அந்த நீர்த்தேக்கத்தில் ஆறு கதவுகள் ஊடாக நீர் வான்பாய்கின்றன.

எனவே நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

மேலும், சென்.கிளயார், டெவன் ஆகிய நீர்வீழ்ச்சிகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.