Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் ரூபவாஹினி ஒருங்கிணைப்பு தொடர்பில் அரசு எடுத்துள்ள தீர்மானம் 

Posted on June 11, 2025 by Hafees | 286 Views

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை ஒருங்கிணைத்து ஒருஅரச கம்பனியாகத் ஸ்தாபிப்பதற்காக 2023.11.27 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அப்போதிருந்த அரச தொழில்முயற்சிகள் மீள்கட்டமைப்பு அலகின் மூலம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன ஒருங்கிணைத்து கம்பனிகள் சட்டத்தின் கீழ் அரச கம்பனியாக ஸ்தாபிக்கப்பட வேண்டுமென விதந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.