Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

ஐரோப்பா விமானங்களுக்கு புதிய வழித்தட மாற்றங்கள் – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

Posted on June 13, 2025 by Hafees | 279 Views

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக சில வான்வழிகள் மூடப்பட்டுள்ளமையினால் லண்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளின் வான் வழித்தடங்களில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது.

இந்த வழித்தட மாற்றங்கள் ஐரோப்பாவிற்கான விமானங்களுக்கான விமான நேரங்களை நீட்டிக்கக்கூடும் என்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையின் 1979 , 94 11 777 1979 அல்லது 94 74 444 1979 என்ற தொலைப்பேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.