Top News
| தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு |
Oct 15, 2026

போரா விழாவில் படம் எடுத்த நபர் கைது

Posted on June 29, 2025 by Hafees | 231 Views

போரா மத விழாவின் போது தனது மொபைல் போனில் படம் பிடித்துக் கொண்டிருந்த பொடி சஹரான் என்ற புனைப் பெயரில் அழைக்கப்படும் நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் கண்டி, ஸ்ரீமத் குடாரக்வத்த மாவத்தையைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

லங்காதீப பத்திரிக்கை செய்தியின்படி, சந்தேக நபரின் கைப்பேசியும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நேரத்தில், சந்தேக நபர் பம்பலப்பிட்டி ரயில் நிலையம் மற்றும் போரா பள்ளிவாயல் பகுதியினை படம், வீடியோ செய்து கொண்டிருந்ததாகவும், மேலும் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.